வேலாயுதம் படத்தில் மொத்தம் 15 வில்லன்கள்
வேலாயுதம் - விஜய் மோதும் வில்லன்கள்
எத்தனை பெரிய மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும், ஒரு படத்தில் அதிகபட்சம் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். காரணம் ஒரே படத்தில் இரண்டுக்கு மேற்பட்ட வில்லன்கள் இருப்பது போல திரைக்கதை அமைப்பது இந்திய ஸ்டைல் அல்ல.
ஆனால் இந்த இலக்கணத்தை தமிழ்சினிமாவில் உடைத்தவர் பார்த்தீபன். அவர் இயக்கி நடித்த இவன் படத்தில் 12 வில்லன்களை வைத்து கதையை உருவாக்கினார். தற்போது பார்த்தீபனையே மிஞ்சிவிட்டார் வேலாயுதம் படத்தின் இயக்குனர் ஜெயம்ராஜா.
வேலாயுதம் படத்தில் மொத்தம் 15 வில்லன்கள் என்கிறார்கள் உதவி இயக்குனர் வட்டாரத்தில். இந்த பதினைந்து பேரில் 13 பேர் தென்னிந்திய வில்லன்கள். இரண்டுபேர் பாலிவுட் வில்லன்கள். இந்த பதினைந்து வில்லன்களையும், ஒரு சாதாரண பால்காரப் பையனான, பசு, எருமை மாடுகளோடு சுற்றிக்கொண்டிருக்கும் விஜய் ஏன் வேட்டையாடுகிறார் என்பதுதான் கதை.
இவர்களை வேட்டையாட விஜய் ஏற்கும் சூப்பர்மேன் கெட்-அப் பேசப்படும் என்கிறார்கள். அதேபோல அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தில் ஜெனலியா குறும்பான டிவி நிருபராகவும், ஹன்ஷிகா விஜயின் கிராமத்து முறைப்பெண்ணாகவும் நடித்திருகிறார்களாம். வேலாயுதம் 80% படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இன்னும் ஒரு பாடல் காட்சி, ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே மீதம் இருக்கிறதாம்!
I like the post and information RTO Agent Faridabad
ReplyDelete