பொன்னியின் செல்வனை
பொன்னியின் செல்வனை கிடப்பில் போட்டார் மணிரத்னம்
மணிரத்னம் ஜூன் மாதம் ஒரு படத்தை தொடங்க இருக்கிறார். ஆனால் அது பொன்னியின் செல்வன் அல்ல என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
நடிகர் கார்த்திக்கின் மகன் விக்ரமை அறிமுகபடுத்தும் படத்தைத்தான் தொடங்க இருக்கிறார் என்கிறார்கள் உறுதியாக இதற்காக தனது உதவியாளரின் கதையே பயன்படுத்த இருகிறாராம்.
ஆனால் மணிரத்தினம் இதயத்தை தைக்கும் விதமாக கல்கியின் கதையமைப்பில் சில மாற்றங்களைக் கேட்கிறார். முக்கியமாக பொன்னியின் செல்வன் ஒரு சாகசம் நிறைந்த கதையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்கிறார்கள்.
இரண்டாவது காரணம் விஜய், மகேஷ்பாபு, அனுஷ்கா ஆகிய நட்சத்திரங்களின் ஒப்பந்தம் அக்டோபருக்கு பிறகே கிடைக்கிறது என்பதால் இடையில் கார்த்தியின் மகனை அறிமுகபடுத்திவிடலாம் என்று முடிவு செய்து விட்டார் என்கிறார்கள்.
இந்த இரண்டு காரணங்களைத் தவிர மூன்றாவதாக ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள்.
தற்போது 125 கோடிக்கு திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் நிதிநிலை 30 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருகிறது என்பதால், மொத்த பட்ஜெட் 180 கோடி என்று கணகிட்டு சன் பிக்ஸர் வசமிருந்து 75 கோடியும், யுடிவி வசமிருந்து 75 கோடியும் தனது சொந்த படநிறுவனத்தில் இருந்து 30 கோடியும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது யூடிவி வெளியேறிவிட்டது என்றும் தகவல் கசிகிறது.
இனி மணிரத்தினமே முன்வந்து பொன்னியின் செல்வன் உண்டா இல்லையா என்பதை அறிவித்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.
No comments:
Post a Comment