Sunday, May 8, 2011

விஜய்க்கு ஏற்ற மாதிரி சில வசனங்கள்

வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி.எந்திரன் பயணம் கோ என தொடர்ந்து வெற்றி பாடல்களுக்கு வரிகள் எழுதி கலக்கி வரும் மதன் கார்க்கி தன்னுடைய எதிர்காலப்படங்களான பொன்மாலைப்பொழுது வந்தான் வென்றான் 180 ஹரா (வசனம்) நண்பன் என மிகவும் பிஸியாக உள்ளார்.இவர் நண்பன் படம் பற்றிக்கூறிய போது எந்திரனை அடுத்து சங்கரின் படத்தில் நான் பணியாற்றுகின்றேன்.இப்படத்தில் பாடல்கள் மட்டும் அன்றி படத்துக்குரிய வசனமும் நானே அமைக்கின்றேன்.ஒரு பாடலில் பதினாறு மொழிகளை உள்ளடக்கி பாடல்களை அமைத்தோம்.இது ஒரு வித்தியாசமான முயற்சியாக அமைந்தது கோ படத்தில் என்னமோ ஏதோ பாடலுக்கு பிறகு ஹரிஸுடன் இணைந்து இப்பட பாடலை எழுதிகிறேன்.கல்லூரி பாடல் ஒன்றும் இப்படத்திற்காக எழுதினேன் இது பழைய கல்லூரிக்காலங்களை அனைவருக்கும் மீட்டுத்தரும் பாடலாக அமையும் .இன்னும் ஒரு காதல் பாடலை எழுதியுள்ளேன்.இது அனைவரையும் நிச்சயம் கவரும்.நட்பின் பெருமை கூறும் பாடல் ஒன்றும் நண்பன் படத்திற்காக எழுதியுள்ளேன்.இவ்வரிகளை பார்த்து சங்கர் பாராட்டினார்.சங்கர் ஹரிஸின் ஆதரவு எனக்கு மிகுந்த தெம்பை கொடுத்தது.நண்பன் பட வசனங்கள் மிக அருமையாக அமைத்துள்ளேன்.விஜய்க்கு ஏற்ற மாதிரி சில வசனங்கள் அமைத்துள்ளேன்.காமெடி சென்டிமென்ட் காதல் என வித்தியாசமான வசனங்கள் அமைத்துள்ளேன் நண்பன் படத்திற்காக என்றார்.

3 comments: